இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் தாக்கப்பட்டது; ஓமன் அருகே நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

3



நமது நிருபர்




கடந்த நான்கு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் கடற்பகுதியில் இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல்கள் மீது மூன்றாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்காசிய நாடான ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அமைதிப்பேச்சில் உடன்பாடு எட்டாத நிலையில், ஈரானுக்கு நெருக்கடி தரும் வகையில், வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த நான்கு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் கடற்பகுதியில் இந்திய மாலுமிகள் பயணித்த மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற இந்தக் கப்பல், தங்கள் வழிமுறைகளை பின்பற்றத் தவறியதால், துல்லிய தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்திய மாலுமிகள் தொடர்புடைய கப்பல்கள் மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இது என்பதால் சர்வதேச கடல் எல்லையில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இந்திய மாலுமிகளுடன் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதற்கு, மத்திய அரசு கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.

4 நாள்; 3 தாக்குதல்கள்

ஜூன் 8 : பலாவு நாட்டின் கொடியுடன் சென்ற 'எம்.டி மாரிவெக்ஸ்' என்ற எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டது. இதில் இருந்த 24 இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஜூன் 10 : ஓமன் வளைகுடாவில் உள்ள சோஹர் அருகே, பலாவு நாட்டுக்கு சொந்தமான 'எம்.டி செட்டபெல்லோ' ' என்ற கப்பல், ஏவுகணை மூலம் தாக்கப்பட்டது. இதில் இருந்த, 28 மாலுமிகளில், 24 பேர் இந்தியர்கள். தாக்குதல் நடந்த கப்பலில் இருந்து, 21 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், மூன்று பேர் உயிரிழந்தனர்.

ஜூன் 11 : ஓமனின் ஷினாஸ் துறைமுகத்திற்கு அருகே கினியா-பிசாவ் நாட்டின் கொடியுடன் சென்று கொண்டிருந்த 'எம்.டி ஜல்வீர்' என்ற எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


@block_B@

ஐ.நா.,வில் எதிர்ப்பு!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 'சரக்குக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஒருபோதும் ஏற்க முடியாது; அதை வன்மையாக கண்டிக்கிறோம்' என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அதிரடியாகவும், கறாராகவும் முழங்கியுள்ளது.block_B

@block_B@

போர் நிறுத்தம் முறிகிறது!

அமைதி பேச்சு தொடர்பாக நடந்த முயற்சிகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், போர் நிறுத்தும் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.block_B

Advertisement