சென்னை சென்ட்ரல் – பெங்களூரு உட்பட 9 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை: கர்நாடகா மாநிலம் கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில், பணிமனை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், சென்னை சென்ட்ரல் – பெங்களூரு உட்பட ஒன்பது விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
* ஜோலார்பேட்டை – பெங்களூரு ரயில், ஜூலை 16 முதல் 19ம் தேதி வரை, பெங்களூரு கன்டோன்மென்ட் வரை இயக்கப்படும்
* சென்ட்ரல் – கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் வரும் ஜூலை 31, ஆக., 1ம் தேதி மாற்றுப்பாதையில் செல்வதால், கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படும்
* கே.எஸ்.ஆர்., பெங்களூரு – சென்ட்ரல் விரைவு ரயில், வரும் ஜூலை 31, ஆக., 2, 3ம் தேதிகளில் எஸ்.எம்.வி.டி., பெங்களூருவில் இருந்து இயக்கப்படும்
* சென்ட்ரல் – கே.எஸ்.ஆர். .பெங்களூரு லால் பாக் ரயில், வரும் ஜூலை 31 முதல் ஆக., 3 எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வழியாக இயக்கப்படும்
* கே.எஸ்.ஆர்., பெங்களூரு – சென்ட்ரல் ரயில் வரும் ஆக., 1ம் தேதியும், சென்ட்ரல் – கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் வரும் ஆக., 2லும் ரத்து செய்யப்படும்
* சென்ட்ரல் – கர்நாடகா மாநிலம் அசோகபுரம் ரயில் வரும் ஆக., 2ம் தேதியும், அசோகபுரம் – சென்ட்ரல் ரயில் வரும் ஆக., 3ம் தேதியும் ரத்து செய்யப்படும்
* கே.எஸ்.ஆர்., பெங்களூரு – ஜோலார்பேட்டை ரயில் வரும் ஆக., 1 முதல் 4ம் தேதி வரை, பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து இயக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
வட மாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு
-
யோகா விழிப்புணர்வு
-
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணையில் 23வது நாளாக வெள்ளம்
-
'நீட்' மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 30 பேர் கைது! பீஹாரில் மருத்துவ மாணவர்கள் அட்டூழியம்
-
பணம், கொலுசு, மொபைல் திருடிய 4 பேருக்கு காப்பு
-
டிரைவர் வீட்டில் திருடிய வாலிபருக்கு தர்ம அடி