ராம்நகர் சபர்பன் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா

ராம்நகர்: ராம்நகர் சபர்பன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

காட்டூர் சி - 1 காவல்நிலையத்தின் சப்----இன்ஸ்பெக்டர் அழகுமாரி செல்வம், சுபா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

பள்ளி முதல்வர் ஹேமா, ''சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு உண்டு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

இயற்கை பாதுகாப்பை விளக்கும் சுற்றுச்சூழல் பாடலை, மாணவர்கள் பாடினர். உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின், ராம்நகர் சாஸ்திரி சாலை முதல் ராமர் கோவில் வரை பிளாஸ்டிக் கழிவு அகற்றினர். பெற்றோருக்கும், காவல்துறையினருக்கும் மருத்துவ மூலிகை மரக்கன்று வழங்கப்பட்டது.

Advertisement