பெண்களை பாதுகாக்க களமிறங்கியது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை!
கோவை: மாநில அளவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்ட நிலையில், கோவையில் காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நேற்று ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டனர்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை மையமாக கொண்டு, விஜய் தலைமையிலான தமிழக அரசு, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை துவக்கியுள்ளது.
இப்படையில் உள்ள போலீசார், பெண்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
கோவையில், ரூரல் பகுதிக்கு ஒரு குழுவும், மாநகரில் இரண்டு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு குழுவில் எஸ்.ஐ., இரு பெண் போலீஸ், ஒரு டிரைவர் வீதம் நான்கு பேர் உள்ளனர். சுழற்சி முறையில் பணிபுரிய ரூரலில் டிரைவர் உட்பட 8 பேரும், மாநகரில் 16 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், சிங்கப்பெண் திட்டத்திற்கான வாகனங்களை அக்குழுவினரிடம் நேற்று மாலை வழங்கினார். தொடர்ந்து இக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும்
-
இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
-
பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பாஜ அரசு முக்கியத்துவம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு முதல்வர் விஜய் பயணம்
-
புகழ் பெற்ற துப்பாக்கி சுடும் வீரர் ஜஸ்பால் ராணா காலமானார்
-
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.134.84 கோடி ஒதுக்கீடு; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 அதிகரிப்பு; 2 நாட்களாக சரிந்த நிலையில் விர்ர்!