தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் 

உடுமலை: திருப்பூர் தெற்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற, மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், இரு ஆண்டுக்கு முன் இருந்த நிலையே, அதாவது  தி.மு.க., ஆட்சியின் நிலைப்பாடே, எங்கள் நிலைப்பாடு என கூறியுள்ளார்.

எனவே, நீதிமன்ற உத்தரவுபடியும், முருக பக்தர்களின் விருப்பப்படி, வரும் கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அரசு உறுதியளிக்க வேண்டும், என வலியுறுத்தி, ஹிந்து முன்னணி சார்பில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் தலைமையில், தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement