சி.ஏ. தேர்வில் சாதனை: 'ஸ்ரீகுரு சர்வா' அபாரம்

திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீ குரு சர்வா சி.ஏ. அகாடமியின் 13-ம் ஆண்டு சி.ஏ தேர்வு சாதனையாளர்கள் பாராட்டு விழா நடந்தது. ஆடிட்டர் அஸ்வின் அரசப்பன் பங்கேற்று சர்வதேச வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

தேசிய அளவிலான சி.ஏ. இடைநிலைத் தேர்வில் 417/600 மதிப்பெண்கள் பெற்ற மகாலட்சுமி, அடித்தளத் தேர்வில் (பவுண்டேஷன்) 337/400 பெற்ற பிரணவிகா, 336/400 பெற்ற சஞ்சித் மற்றும் சிறப்புத் தேர்ச்சி (டிஸ்டிங்க்ஷன்) பெற்ற சஷ்டிகா ஸ்ரீ (300/400), சுமன் (294/400), தீபிகா (280/400), மவுனிதா (280/400) ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அகாடமியின் முதன்மை செயல் அதிகாரி அருணாச்சலம் செய்திருந்தார்; தாளாளர் சுதா ராணி நன்றி கூறினார்.

Advertisement