போரின் சகாப்தம் அல்ல; மோதல்களுக்கு பேச்சுவார்த்தையே தீர்வு; இந்தியா நிலைப்பாடு இதுதான்

3

புதுடில்லி: போரின் சகாப்தம் அல்ல; மோதல்களுக்கு பேச்சுவார்த்தையே தீர்வு என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பல்கேரியாவுக்குப் பயணம் மேற்கொண்டு கொண்டுள்ளார். அங்குள்ள மூத்த தலைவர்களுடன் இருதரப்பு ஒத்துழைப்பு, இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். எதிர்காலத்தில் இரு நாடுகளும் இணைந்து என்ன செய்ய முடியும் என்பது குறித்து கலந்துரையாடினார். பிறகு நிருபர்களிடம் ஜெய்சங்கர் கூறியதாவது:
இந்தியாவுக்குத் தெளிவான நிலைப்பாடு உள்ளது. இது போர்க்காலம் அல்ல என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மோதலுக்கான ஒரே தீர்வு பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமும்தான். கடல்வழி வர்த்தகம் தடைபடாமலும், ஆபத்துக்குள்ளாகாமலும் இருப்பது முக்கியம். எரிசக்தி, உணவு மற்றும் உரங்கள் குறித்த கவலைகளை இந்தியாவும் பலமுறை வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Advertisement