இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.40 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

2

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

உச்சிப்புளி அருகே அரியமான் கடல் பகுதி அருகே உள்ள தோப்பு பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வலி நிவாரணி மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து தகவல் அறிந்த க்யூ போலீசார், 8 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். அவை ராமநாதபுரம் சுங்க துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

அதேபோல, தூத்துக்குடி கடற்கரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான வாசனை சோப்பு, ஷாம்புகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்; கடத்தல் கும்பல் தப்பியோடியது.



Advertisement