முதல்வர் விஜய் தங்கியிருந்த டில்லி தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து

2

புதுடில்லி: டில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் டில்லி சென்றுள்ளார். நேற்று அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து பேசினார். தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அதன்பிறகு, டில்லியில் உள்ள தமிழக அரசு இல்லத்தில் முதல்வர் விஜய் ஓய்வு எடுத்தார். இன்று நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள உணவகத்தில் அனைவரும் அமர்ந்து சாப்பிடும்போது இந்த தீபத்து ஏற்பட்டுள்ளது.

புகைமூட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் வேகமாக வெளியேறினர்.உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement