இலங்கை துணை துாதர் முதல்வருடன் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வருகை தந்த இலங்கை துணைத் துாதர், முதல்வரை சந்தித்து பேசினார்.

புதுச்சேரிக்கு நேற்று அரசு முறை பயணமாக தென் இந்தியாவிற்கான இலங்கை நாட்டின் துணைத் துாதர் கணேசநாதன் கேதீஸ்வரன் வருகை தந்தார். அவர் நேற்று, மதியம் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, கிருத்திகா தேவி கேதீஸ்வரன் உடனிருந்தார்.

Advertisement