ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
புதுடில்லி: ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த மனுவை இன்று (ஜூன் 12) சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்த உள்ளது.
தமிழகம், கர்நாடகா, ம.பி., உட்பட நாடு முழுதும் காலியாக உள்ள, 26 ராஜ்யசபா இடங்களுக்கு, வரும் 18ல் தேர்தல் நடக்கிறது. முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் ம.பி.,யில், மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
மத்திய பிரதேசத்தில் முன்னாள் எம்.பி., மீனாட்சி நடராஜனை அக்கட்சி வேட்பாளராக காங்கிரஸ் களமிறக்கியது. காங்., வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார். தெலுங்கானாவில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை அவர் மறைத்ததாக, பா.ஜ., வேட்பாளர் மகேஷ் கெவத் அளித்த புகாரின்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக, டில்லியில், தேர்தல் கமிஷன் அதிகாரிகளை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (ஜூன் 12) நடைபெற உள்ளது.
இருப்பினும், நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா மற்றும் அதுல் எஸ் சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு, நடைபெற்று வரும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த மனு எவ்வாறு ஏற்கத்தக்கது என கேள்வி எழுப்பி உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நடவடிக்கைகள் துவங்கி நடக்கும் போது இடையே கோர்ட் குறுக்கிடுவதில்லை என்பது முந்தைய தீர்ப்பு. இப்போ குறுக்கிட முடியுமா?.
உச்சநீதிமன்றம் எப்பொழுதும் கபில் மற்றும் சிங்வியின் கைப்பாவை போலவே செயல்படும்..
சட்டத்தின் முன் எல்லோரும் சமம்தானா?
சாமானியனின் வழக்குகள் வருஷ கணக்கில் லிஸ்ட் ஆகம பின்தங்கி இருக்கு.
நிறைய வழக்குகள் 15 வருஷம், 20 வருஷம் எடுத்துக்கொள்ளாமல் இருக்கு, இவங்க சனி கிழமை வேல செய்ய மாட்டாங்க, தினமும் நேரத்தை ஜாஸ்தி செஞ்சு வேல சியமாட்டாங்க, லீவு குறைச்சுக்க மாட்டாங்க.
இப்போ காங்கிரஸுக்கு மட்டும், ஒரே நாள கேஸ் லிஸ்ட் பண்ணி, விசாரணிக்கு எடுத்துக்கறாங்க.
என்ன நடக்குது நம்ம நாட்டுல?
சாமானியன் ஞாயம் கிடைக்கணும்ன்னா வருஷ கணக்கா உக்கார்ந்து இருக்கணும்
ஒழுங்கா விண்ணப்பம் கூட பண்ணாம, உண்மையை மறைச்சு, கேஸ் இருக்கறத கூட சொல்லாம இருந்த இந்த ஆளுக்கு, ஒரே நாளை லிஸ்டிங், விசாரணை.மேலும்
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?