கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி: கோழிக்கோட்டில் ஒருவருக்கு தொற்று உறுதி!
கோழிக்கோடு: கேரளாவில் 43 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பாதிப்புக்குப் பிறகு கேரளாவில் நிபா வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. வௌவால்களால் பரவும் இந்த வைரஸ், மனிதர்களின் சுவாச மண்டலம் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை முதன்மையாக பாதிக்கும். அண்மை காலமாக இந்த தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்திருந்த கேரளாவில், தற்போது மீண்டும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கோழிக்கோட்டைச் சேர்ந்த 43 வயது நபர் ஒருவருக்கு, அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் வெளிநோயாளி பிரிவு மூலமாக மருத்துவமனைக்கு வந்ததாகவும், பரிசோதனைக்கு முன்பாக அவர் பலருடன் பழகியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், தற்போதைய நிலையில் நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் முரளிதரன் கூறுகையில், "பொதுமக்கள் யாரும் பீதியடையத் தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நோயாளியுடன் தொடர்பில் இருந்திருக்க வாய்ப்புள்ள மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்," எனக் கூறினார்.
[
மேலும்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு