'ஏ' பிளஸ் ரவுடிக்கு காங்.,கில் மாநில பதவி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை சேர்ந்த, 'ஏ' பிளஸ் ரவுடி தினேஷை, காங்கிரஸ் ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தின் பிரபல ரவுடி ஸ்ரீதர், கடந்த 2016ல், கம்போடியாவில் போலீசார் தன்னை கைது செய்ய நெருங்கியதை அறிந்து, தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீதர் மறைவுக்குப் பின், அவரிடம் ஓட்டுனராக இருந்த தினேஷ் ஒரு குழுவாகவும், ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா ஒரு குழுவாகவும் செயல்பட்டனர்.
இரு பிரிவும் அடிக்கடி மோதியதால், கொலை சம்பவங்கள் நடந்தன. ரவுடி தினேஷ் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பணம் பறித்தல் என, 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. காஞ்சிபுரத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும், 'ஏ' பிளஸ் ரவுடியாகவும் உள்ள தினேஷை போலீசார் கைது செய்து, கோவை, சேலம் உள்ளிட்ட சிறைகளிலும் அடைத்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆர்.டி.ஐ., பிரிவின் மாநில துணை தலைவராக தினேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். தனக்கு பதவி அளித்ததற்காக, காங்கிரஸ் மாநில ஆர்.டி.ஐ., பிரிவு தலைவர் கனகராஜூக்கு நன்றி தெரிவித்து, காஞ்சிபுரத்தில் போஸ்டர்களை தினேஷ் ஒட்டியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
@block_B@
ஏ பிளஸ் என்றால் என்ன?
போலீஸ் நிலை ஆணைகளின்படி ரவுடிகள் ஏ பிளஸ், ஏ, பி, சி என வகைப்படுத்தப்படுகின்றனர். இதில் ஏ பிளஸ் என்பது மிகவும் அபாயகரமான ரவுடிகளை குறிக்கக்கூடியது. குற்றங்களை திட்டம் தீட்டி செயல்படுத்துபவர்கள், குற்றவாளிகளுக்கு தலைவனாக செயல்படுபவர்கள் தான் இந்தப் பட்டியலில் வைக்கப்படுவர். இவர்கள் மீது பிரத்யேக கண்காணிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்பது காலம் காலமாக பின்பற்றப்படும் போலீஸ் நிலை ஆணையாகும்.block_B
வாசகர் கருத்து (13)
Raman Rangarajan - ,இந்தியா
12 ஜூன்,2026 - 10:48 Report Abuse
ஏன் சார், லக்னோ கோர்ட் இந்திரா காந்தியை கிரிமினல்ன்னு சொன்னாங்க ..ஆனா அந்த அம்மா பிரதம மந்த்ரி ..சஞ்சய் காந்தி நம்பர் one .. ராகுல் காந்தி தினம் பிரைம் மினிஸ்டரயை மாதிரி திட்டுறாரு ..அப்படி இருக்க இவரு இந்த ரவுடி காஞ்சிபுரம் காங்கிரஸ் தலைவர் ஆனால் என்ன தப்பு 0
0
Reply
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
12 ஜூன்,2026 - 09:38 Report Abuse
ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. 0
0
Reply
Chandhra Mouleeswaran MK - Tiruppur,இந்தியா
12 ஜூன்,2026 - 08:12 Report Abuse
அந்த மோத்திலால் காலத்தில் இருந்தே காங்கிரஸ் கமிஷன் களவாணிக் கலப்படக் கட்சியின் பெருமபலான "தல்ல்லீவருகள்" களவாணிப் பயல்கள்தானே? "சேரிடம் அறிந்து சேர்" என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்? "கழுதை கெட்டால் குட்டிச் சுவர் களவாணி கெட்டால் காங்கிரஸ்" 0
0
Reply
rama adhavan - chennai,இந்தியா
12 ஜூன்,2026 - 04:34 Report Abuse
தாயைப் போல பிள்ளை, தலைவரைப் போல மாநில நிர்வாகி. 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
12 ஜூன்,2026 - 03:59 Report Abuse
தலைவர் கூட சவுக்கர் வீட்டில் திராவிடம் ஊற்றிய பெரிய கிரிமினல்தான். 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
12 ஜூன்,2026 - 01:09 Report Abuse
இது ஒன்றும் காங்கிரசுக்கு புதிது அல்ல தலைவரை போன்று தொண்டர்களும் அமைப்பார்கள் யாரும் கேட்க முடியாது 0
0
Reply
Nandakumar Naidu - ,
12 ஜூன்,2026 - 01:05 Report Abuse
போலீசா காமெடி பீசா? 40 வழக்குகள் இருக்கும் ஒருவனை ஏன் சிறையில் அடைத்து மக்களின் வரிப்பணத்தில் அவனுக்கு ராஜ மரியாதை செய்ய வேண்டும்? என்கவுண்டரில் போட்டு தள்ளி இருக்க வேண்டாமா? காங்கிரஸ் ஒரு தேச, சமூக, ஹிந்து மற்றும் மக்கள் விரோத கட்சி, இது போன்ற சமூக விரோதிகள் தான் அதுக்கு தேவை. 0
0
Reply
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
11 ஜூன்,2026 - 23:21 Report Abuse
தம்பி விசிலடிச்சான் விஜய்.. எதற்கும் சூதனமாக ராவுளிடம் தள்ளியே நிற்கவும் . ரொம்ப குழைஞ்சு பேசினா ஏழரை கண்டிப்பாக வரும் 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
11 ஜூன்,2026 - 22:58 Report Abuse
40க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆனால் தண்டனை ஏதுமில்லை .படிப்பதற்கு வேடிக்கையாக உள்ளது .சட்டம் கடமையை செய்யவில்லையா அல்லது சதம் அடிக்கணும்னு காத்திருப்பா ? 0
0
Reply
ஆரூர் ரங் - ,
11 ஜூன்,2026 - 22:29 Report Abuse
பொருத்தமான ஆளுக்கு பொருத்தமான கட்சியில் பொறுப்பு. சரிதானே?.. 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
செயற்கை நுண்ணறிவுக்கு தலையாட்டினால் முதலாளியாகிவிடும்; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து
-
ஏப்ரல் கட்டணமே செலுத்தலாம்
-
தென் ஆப்ரிக்காவுக்கான துணை துாதராக கோவேந்தன் பொறுப்பேற்பு
-
பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலில் ‘மாஜி’ அமைச்சர் பெயர் ‘மிஸ்ஸிங்’
-
கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் சேர்ந்து நிதியுதவி பெற அழைப்பு
-
ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண கலெக்டர் அறிவுறுத்தல்
Advertisement
Advertisement