அசாம்- நாகாலாந்து எல்லையில் கச்சா எண்ணெய் குறித்து ஆய்வு: மத்திய, மாநில அரசுகள் கையெழுத்து

1

புதுடில்லி: அசாம் - நாகாலாந்து மாநில எல்லையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கூட்டாக ஆய்வு செய்து உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


மத்திய அரசு, அசாம் மற்றும் நாகாலாந்து அரசுகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.


இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: இன்று வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தை பார்க்கிறோம்.
இதன் மூலம் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன.
வளர்ச்சி அடைந்த வடகிழக்கு மாநிலங்களுக்கான பிரதமர் வகுத்த கொள்கை நாட்டு மக்கள் முன்பு வைக்கப்பட்டு உள்ளது. இன்று அதனை அடைவதற்கான வழியில் இருந்த ஒரு தடையை அகற்றி உள்ளோம்.


இன்று வரலாற்று சிறப்பு மிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அசாம் மற்றும் நாகாலாந்து மாநில அரசுகள் கையெழுத்து போட்டு உள்ளன. அந்த பகதிகளை தாண்டி மேலம் ஆய்வு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக நாகாலாந்து முதல்வர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement