மம்தாவை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய திரிணமுல் எம்பிக்கள் 19 பேர்; வெளியானது பட்டியல்!

8


புதுடில்லி: திரிணமுல் காங்கிரஸின் அதிருப்தி லோக்சபா எம்.பி.க்கள் 20 பேரில் 19 பேரின் பெயர்ப் பட்டியல் இறுதியாக வெளியாகியுள்ளது.

ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியைத் தொடர்ந்து, அதன் தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி உட்கட்சிப் பிரச்னையை எதிர்கொண்டுள்ளார். இந்தத் தேர்தல், மாநிலத்தில் அதன் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. மாநிலத்தில் முதல் முறையாக பாஜ ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் ராஜினாமா செய்து வருகின்றனர்.

இதுவரை ராஜ்யசபா எம்பிக்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் திரிணமுல் காங்கிரஸ் கட்சி அதன் சட்டசபை எம்எல்ஏக்கள் இடையே ஒரு கிளர்ச்சியை எதிர்கொண்டது. ​​கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. ரீதாப்ரதா பானர்ஜி, 80 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 58 பேர் ஆதரவுடன் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் திரிணமுல் காங்கிரஸின் அதிருப்தி லோக்சபா எம்.பி.க்கள் 20 பேரில் 19 பேரின் பெயர்ப் பட்டியல் இறுதியாக வெளியாகியுள்ளது. இத்துடன், சபாநாயகர் ஓம் பிர்லாவின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மற்றும் சாயோனி கோஷ் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர். மே 18ம் தேதி லோக்சபா சபாநாயகரிடம் தங்களது கடிதத்தைச் சமர்ப்பித்தனர்.

இந்தக் குழுவிற்கு கட்சியின் மூத்த தலைவர் ககோலி கோஷ் தஸ்திதார் தலைமை தாங்குகிறார். 28 எம்பிக்களுடன், திரிணமுல் காங்கிரஸ் லோக்சபாவில் காங்கிரஸ் (99) மற்றும் சமாஜ்வாதி கட்சிக்கு (37) அடுத்தபடியாக மூன்றாவது பெரிய எதிர்க்கட்சியாக உள்ளது. கட்சியின் மொத்த பலத்தில் மூன்றில் இரண்டு பங்கான 19 எம்பிக்களை கொண்ட அதிருப்திக் குழுவின் பலம், கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மீற அவர்களுக்கு உதவுகிறது. பாஜ தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர மாட்டோம் என்றும், அவர்களுக்கு ஆதரவு மட்டும் அளிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அதிருப்தி எம்பிக்கள் முழுப் பட்டியல் இதோ:
(1) ககோலி கோஷ் தஸ்திதார்

(2) சதாப்தி டோய்

(3) பாபி ஹல்தார்

(4) ஷர்மிலா சர்க்கார்

(5) ஷர்மிலா பந்த்யோபாத்யாய்

(6) ஜகதீஷ் பர்மா பசூனியா

(7) அசித் குமார் மால்

(8) அருப் சக்ரவர்த்தி

(9) ரச்னா பானர்ஜி

(10) சாயோனி கோஷ்

(11) கலிலூர் ரஹ்மான்

(12) அபு தாஹிர் கான்

(13) யூசுப் பதான்

(14) மிட்டாலி பெய்க்

(15) மாலா ராய்

(16) காளிபாத சோரன்

(17) தீபக் அதிகாரி

(18) ஜூன் மாலியா

(19) பார்த்தா பௌமிக்

Advertisement