உயர்கல்வி சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறை தொடக்கம்

செங்கல்பட்டு: மாணவர்களின் உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு வழிகாட்டுவதற்காக, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறையை, கலெக்டர் வீரப்பன், நேற்று தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், 2025 – 26ம் கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்கள் 14,783 பேர் தேர்ச்சி பெற்றனர்; 1,719 மாணவர்ள் தோல்வியுற்றனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமல்லாமல், தோல்வியுற்ற மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து உயர்கல்வியில் சேர்க்க, மாவட்ட அளவில் உயர்கல்வி வழிகாட்டுதல், கட்டுப்பாட்டு அறை, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையை, கலெக்டர் வீரப்பன், நேற்று தொடங்கிவைத்தார். இதில், முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





Advertisement