வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே வந்த காட்டு யானை
பந்தலுார்: பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் யானைகள் முகாமிட்டு உள்ளன.
பந்தலுர் சேரம்பாடி வனச்சரகம் கையுன்னி பகுதியில், நேற்று முன்தினம் இரவு கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் யானை காபி தோட்டம் வழியாக சென்றுள்ளது.
வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்ட சென்ற போது, கேசவன் என்பவரது வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளது. அங்கிருந்த மாமரத்தில் மாங்காய்களை பறித்து உட்கொண்ட நிலையில், வனத்துறையினர் அங்கு சென்று வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து, வனவர் முத்தமிழ் தலைமையிலான குழுவினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாணவர் தற்கொலை அரசு பள்ளி முற்றுகை
-
இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க துாதருக்கு மீண்டும் 'சம்மன்'
-
பணிப்பெண்ணை சீண்டிய 55 வயது நபருக்கு 'காப்பு'
-
3 ஆண்டாக கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்
-
தேர்தல் நடவடிக்கைகளில் தலையிட முடியாது 'மாஜி' எம்.பி., மனுவை தள்ளுபடி செய்தது கோர்ட் ராஜ்யசபா தேர்தல்
-
எந்த பிரச்னையும் இல்லை!
Advertisement
Advertisement