தேர்தல் நடவடிக்கைகளில் தலையிட முடியாது 'மாஜி' எம்.பி., மனுவை தள்ளுபடி செய்தது கோர்ட் ராஜ்யசபா தேர்தல்
- டில்லி சிறப்பு நிருபர் -: மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலுக்கு போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, காங்., மூத்த தலைவர் மீனாட்சி நடராஜன் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
தமிழகம், குஜராத், ம.பி., உட்பட, நாடு முழுதும் காலியாக உள்ள, 26 ராஜ்யசபா இடங்களுக்கு வரும், 18ல் தேர்தல் நடக்கிறது.
எதிர்ப்பு முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் ம.பி.,யில், மூன்று ராஜ்ய ச பா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மொத்தம், 230 எம்.எல்.ஏ.,க்களை உடைய ம.பி., சட்டசபையில், ஒரு எம்.பி.,யை தேர்ந் தெடுக்க, 58 எம்.எல்.ஏ.,க் களின் ஓட்டுகள் தேவை.
பா.ஜ.,வுக்கு, 164 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், அக்கட்சிக்கு இரண்டு இடங்கள் கிடைக்கும். எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு, 64 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால் ஒரு ராஜ்யசபா இடம் கிடைப்பதாக இருந்தது.
அந் த இடத்துக்கு முன்னாள் எம்.பி., மீனாட்சி நடராஜனை அக்கட்சி நிறுத்தியது. அதே சமயம், அவரை எதிர்த்து மகேஷ் கெவத் என்பவரை மூன்றாவது இடத்துக்கு பா.ஜ., களமிறக்கியது.
இவர் வெற்றி பெற, கூடுதலாக எட்டு ஓட்டுகளே தேவைப்பட்டன.
இந்த சூழலில், மீனாட்சி நடராஜனின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி அரவிந்த் சர்மா நிராகரித்தார். தெலுங்கானாவில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை மறைத்ததாக, பா.ஜ., வேட்பாளர் மகேஷ் கெவத் அளித்த புகாரின்படி, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்., தேர்தல் கமிஷனில் முறையிட்டது; ஆனால் எந்த பயனுமில்லை.
விசாரணை இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தை மீனாட்சி நடராஜன் நாடினார். இதற்கிடையே, ம.பி.,யில் இருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர்கள் மகேஷ் கெவத், தருண் சுக், ரஜினிஷ் அகர்வால் ஆகியோர் போட்டியின்றி வென்றதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, அதுல் எஸ்.சந்துார்கர் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசியலமைப்பு சட்டப்பிரிவு - 329ன் கீழ், தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்ட நிலையில், நீதிமன்றங்கள் அதில் தலையிட முடியாது.
தேர்தல் நடத்தும் அதிகாரி எடுத்த முடிவு சட்டவிரோதமானது அல்லது தன்னிச்சையானது எனக்கூறி, நீதிமன்றம் விதிவிலக்குகளை உருவாக்க முடியாது.
அப்படி செய்தால், அது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால், அதற்குரிய தீர்வு தேர்தல் கமிஷனை அணுகுவது அல்லது தேர்தல் முடிந்த பிறகு தேர்தல்மனு தாக்கல் செய்வது மட்டுமே. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும்
-
கிறிஸ்துவ போதகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி
-
பினாமி பெயரில் கான்ட்ராக்ட் எடுத்த திமுக 'மாஜி'க்கள் மீது நடவடிக்கை?
-
திமுக - தவெக தான் பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள்: அமித் ஷா திட்டவட்டம்
-
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு குண்டாஸ்
-
வடலுார் பொறியாளர் இல்ல திருமண விழா
-
அரசு மகளிர் கலைக்கல்லுாரி: அமைச்சர் உறுதி