எந்த பிரச்னையும் இல்லை!

காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல். அதில் எந்தவொரு எதிர்க்கட்சியும் பயணிக்க விரும்பாது. அப்படி அந்த கப்பலில் யாராவது பயணித்தாலும் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. காங்கிரசை நம்பினால் பூஜ்யம் தான் கிடைக்கும். வலுவான கட்சியாக பா.ஜ., உள்ளது. எங்களை யாராலும் வீழ்த்த முடியாது.

தேவேந்திர பட்னவிஸ் மஹாராஷ்டிர முதல்வர், பா.ஜ.,


வெற்றி பெறாது!,



பார்லி.மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் துவங்கவுள்ள நிலையில், லோக்சபாவில் பா.ஜ.,வுக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை பெற எதிர்க்கட்சிகளை உடைக்கும் முயற்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். இது, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறது. அவரது தீய திட்டங்கள் வெற்றி பெறாது.


ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்

இந்நிலை தான் ஏற்படும்!



மம்தா பானர்ஜி, அபிஷேக் தலைமையிலான திரிணமுல் காங்., போலியானது. ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையிலான அணியே உண்மையா ன திரிணமுல் காங்., கட் சி. கட்சியை விட அபிஷேக்குக்கு முக்கியத்துவம் அளித்ததே மம்தா வீழ்ச்சிக்கு காரணம். குடும்ப அரசியலை ஊக்குவிப்போருக்கு இந்நிலை தான் ஏற்படும்.


செஷாத் பூனாவாலா செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

Advertisement