மாணவர் தற்கொலை அரசு பள்ளி முற்றுகை
அம்பத்துார்: மாணவர் தற்கொலைக்கு, தமிழ் ஆசிரியர் தரக்குறைவாக பேசியதே காரணம் என குற்றம்சாட்டிய உறவினர்கள், அரசு பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
அம்பத்துார் சிவானந்தா நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாபுவின் மகன் கமலேஷ், 14. அருகிலுள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார்.
தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறாததால், கடந்த 9-ம் தேதி மறு தேர்வு எழுதியுள்ளார். மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், தமிழ் ஆசிரியர் தரக்குறைவாக பேசியதால்தான் கமலேஷ் தற்கொலை செய்து கொண்டதாககூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
அம்பத்துார் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தற்கொலை குறித்து, அம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
கிறிஸ்துவ போதகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி
-
பினாமி பெயரில் கான்ட்ராக்ட் எடுத்த திமுக 'மாஜி'க்கள் மீது நடவடிக்கை?
-
திமுக - தவெக தான் பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள்: அமித் ஷா திட்டவட்டம்
-
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு குண்டாஸ்
-
வடலுார் பொறியாளர் இல்ல திருமண விழா
-
அரசு மகளிர் கலைக்கல்லுாரி: அமைச்சர் உறுதி