இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க துாதருக்கு மீண்டும் 'சம்மன்'
புதுடில்லி: ஓமன் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படையினர் நடத்திய தாக்குதலில், மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர் பாக, அந்நாட்டின் இந்திய துாதருக்கு மத்திய அரசு நேற்று மீண்டும் சம்மன் அனுப்பி, கண்டனத்தை பதிவு செய்தது.
அமெரிக்கா மற்றும் மேற்காசிய நாடான ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் கடற்பகுதியில் இந்திய மாலுமிகள் பயணித்த மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.
அமெரிக்க கடற்படையின் இந்த நடவடிக்கைக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. நம் நாட்டிற்கான அமெரிக்க அரசின் தற்காலிக துாதர் ஜேசன் மீக்சிற்கு, கடந்த 10ம் தேதி, 'சம்மன்' அனுப்பி கண்டனம் தெரிவித்தது.
இந்த சம்பவம் நடந்த இரு தினங்களுக்கு பின், நேற்று மீண்டும் இரண்டாவது முறையாக நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் அவருக்கு சம்மன் அனுப்பியது.
அவரிடம், 'சர்வதேச நீர் வழித்தடங்களில் வணிகக் கப்பல்கள் மற்றும் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலக்கு வைப்பது உடனே நிறுத்தப்பட வேண்டும்; சர்வதேச சட்டங்களின்படி தடையற்ற கடல் வர்த்தகம் மீட்டெடுக்கப்பட வேண்டும்' என, மத்திய அரசு எடுத்துரைத்தது.
@block_B@ பாதுகாப்பு ஆலோசனை அமெரிக்க படையினரின் தாக்குதலையடுத்து, இந்திய மாலுமிகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஆலோசனைகளை கப்பல் போக்குவரத்து இயக்குனரகம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்த துறை வெளியிட்ட அறிக்கை: * மேற்காசிய நாடுகளான ஏமன், ஓமன் ஒட்டி அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் இந்திய கப்பல்கள், இந்திய மாலுமிகளுடன் செல்லும் சர்வதேச கப்பல்களும் உரிய பாதுகாப்பு எச்சரிக்கையை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். * ஹார்முஸ் ஜலசந்தி வழியை கடக்கும் கப்பல்கள், தங்களின் பயணப் பாதையை இந்தியப் பெருங்கடல் பிராந்திய தகவல் ஒருங்கிணைப்பு மையம் மற்றும் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் தொடர்ந்து பகிர வேண்டும். * பதற்றமான கடற்பகுதியில் பயணிக்கும் போது தங்களின் இருப்பிடத் தகவல்களை அணைக்க வேண்டாம்; இந்தியக் கடற்படையின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும்படி தனியார் கப்பல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.block_B
மேலும்
-
கிறிஸ்துவ போதகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி
-
பினாமி பெயரில் கான்ட்ராக்ட் எடுத்த திமுக 'மாஜி'க்கள் மீது நடவடிக்கை?
-
திமுக - தவெக தான் பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள்: அமித் ஷா திட்டவட்டம்
-
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு குண்டாஸ்
-
வடலுார் பொறியாளர் இல்ல திருமண விழா
-
அரசு மகளிர் கலைக்கல்லுாரி: அமைச்சர் உறுதி