இலவச மருத்துவ முகாம்  வரும் 14ல் நடக்குது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜீவ சேவா  அறக்கட்டளை, கே.எம்.சி.எச்., மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ முகாம் வரும், 14ம் தேதி நடக்கிறது.

பூசாரிப்பட்டியில் உள்ள ஜீவ சேவா அறக்கட்டளை அரங்கத்தில், காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை  நடக்கிறது. பொது மருத்துவ பரிசோதனை, உடல்நல ஆலோசனை, தேவையான மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுப்பகுதி மக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement