முகாம் நிறைவு

மதுரை: தானம் அறக்கட்டளை, சுகம் மருத்துவமனை அறக்கட்டளை சார்பில் பாலமேடு வலையப்பட்டியில் மது போதை மறுவாழ்வு சிகிச்சை முகாம் நிறைவு விழா நடந்தது. மதுப்பழக்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 30 பேர், குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். விழாவில் நிர்வாக இயக்குனர் வாசிமலை தலைமை வகித்தார். டாக்டர் சுக பரணிதரன், சித்தா டாக்டர் சண்முக பிரியா சிகிச்சை அளித்தனர். பயிற்றுநர்கள் செல்வம், விஜயலட்சுமி மனவள, யோகா பயிற்சி அளித்தனர். நிர்வாகிகள் முத்தையா, ஸ்ரீராம், பாலுசாமி, சாமுவேல் ஜேம்ஸ் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement