டூவீலர்கள் பார்க்கிங் கட்டடத்தின் கூரை பெயர்ந்து விழுவதால் ஆபத்து
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அலுவலகம் அருகேயுள்ள டூவீலர்கள் பார்க்கிங் இடத்தில் கட்டடத்தின் கூரை பெயர்ந்து விழுவதால் விபத்து அபாயம் உள்ளது.
பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதி நகரில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அலுவலகம் அருகே பொதுமக்கள், அலுவலர்கள் வசதிக்காக கூரை வசதியுடன் டூவீலர் பார்க்கிங் வசதியுள்ளது. தொடர் பராமரிப்பின்றி பார்க்கிங் கட்டத்தின் கூரை பெயர்ந்து விழுகிறது. இதனால் அவ்விடத்தில் டூவீலர்கள் நிறுத்தும் போது விபத்து அபாயம் உள்ளது.
எனவே பார்க்கிங் கட்டடம் கூரையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.–––
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement