விஷ்வ ஹிந்து பரிஷித் சார்பில்  செயற்குழு கூட்டம்

சிதம்பரம்:   சிதம்பரத்தில், விஷ்வ ஹிந்து பரிசித் சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது.

  சிதம்பரம் இந்து நாடார் சத்திரத்தில் நடந்த கூட்டத்திற்கு விஷ்வ ஹிந்து பரிசித் ஜோதி குருவாயூரப்பன் தலைமை தாங்கினார். சேவா கோட்ட புதுச்சேரி அமைப்பாளர் கார்த்திகேயன், கோட்ட பொறுப்பாளர் ஜெயமுருளி, நகர செயலாளர்கள் கோபிநாத் , நகர தலைவர் முருகவேல், மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ், கிருஷ்ணசாமி, சக்திவேல், டாக்டர் நாராயணன் மற்றும் பலர் பங்கேற்றனர். 

  ஆனி திருமஞ்சனம் தரிசன விழாவை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில், சிதம்பரம் நகர் முழுவதும் சுகாதாரமாக இருக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், தேர் மற்றும் தரிசன விழா அன்று, டாஸ்மாக் கடை, மாமிச கடைகள் மூட உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது.  மாவட்ட  பொறுப்பாளர் முத்துக்குமரன் நன்றி கூறினார்

  

Advertisement