சிறுவாபுரி கோவில் உண்டியல் வசூல் ரூ.85.87 லட்சம், 37 கிராம் தங்கம்

கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி முருகன் கோவில் உண்டியல் காணிக்கையாக, 85.87 லட்சம் ரூபாய், 37 கிராம் தங்கம், 3.617 கிலோ வெள்ளி வசூலானது.

திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில், பிரசித்திபெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இரு மாதங்களுக்கு பின், நேற்று கோவில் பிரகாரத்தில், உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது.

ஹிந்து சமய அறநிலைய துறையின், திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம், பெரியபாளையம் துணை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில், ஊழியர்கள், பக்தர்கள் கொண்ட குழுவினர், காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

எண்ணிக்கையின் முடிவில், 85 லட்சத்து 87,141 ரூபாய், 37 கிராம் தங்கம், 3.617 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது தெரிந்தது.

அவற்றை கணக் கிட்ட பின், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகி கள் வங்கியில் ஒப்படைத்தனர்.

Advertisement