வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்
நெட்டப்பாக்கம்: சொர்ணாவூர் வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் விழா நாளை நடக்கிறது.
சொர்ணாவூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபி ேஷகம் விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி காலை யாகசாலை வாஸ்து, மகாசாந்தி ஹோமம் நடந்தது.
நேற்று காலை 7.00 மணிக்கு புண்யாகவாசனம், நித்யஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை தீர்த்தம், மாலை 5.30 மணிக்கு புண்யாகவாசனம், சாற்றுமுறை தீர்ததம் நடந்தது. வரும் 24ம் தேதி காலை 4.30 மணிக்கு ததுக்த ஹோமம் தொடர்ந்து காலை 7.15 மணிக்கு மகா கும்பாபிேஷகம் விழா நடக்கிறது. தொடர்ந்து வேத சாற்றுமுறை, திவ்யபிரபந்த சாற்றுமுறை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவமும், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.
மேலும்
-
மஞ்சுவிரட்டு
-
18ம் கால்வாய் சீரமைப்பு பணிகளை வேகப்படுத்துங்கள்: நீர் திறப்புக்கு முன் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஹிந்து முன்னணி கூட்டம்
-
இந்தியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்; அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் விருப்பம்
-
ஒலிம்பிக் தினவிழா
-
நீலகிரியில் ஹவுசிங் போர்டில் குடியிருப்போருக்கு... நோட்டீஸ் வினியோகம்!அபாய கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை