தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்
தாம்பரம்: தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு, பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என, பெயர் சூட்ட, தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து, பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். இவரது வீடு, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரத்தில் உள்ளது. அந்த வீட்டில், மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.
வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு, இந்திய ராணுவத்தின் உயரிய விருதான 'அசோக் சக்ரா' விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது நினைவை போற்றும் விதமாக, கிழக்கு தாம்பரத்தில், ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை செல்லும், தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என்று பெயரிட, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, உரிய பரிந்துரை குறிப்புடன் அனுப்பி வைக்குமாறு, நகராட்சி நிர்வாக இயக்குநர் சார்பில், கடந்த 2025, ஆக., 26ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023, பிரிவு 186ன் படி, சாலையின் பெயரை மாற்றம் செய்ய, மாமன்றத்தில் பொருள் வைத்து ஒப்புதல் பெறுவதற்கு, உரிய அனுமதி வழங்க கோரி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலருக்கு 2025, செப்., 19ம் தேதி, மாநகராட்சி மூலம் அனுமதி கோரப்பட்டது.
அதை தொடர்ந்து, தீர்மானம் நிறைவேற்றி, அறிக்கை அனுப்புமாறு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலரிடம் இருந்து, 2025 அக்., 23ம் தேதி கடிதம் வந்தது. இதையடுத்து, தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு, மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என பெயர் சூட்ட, நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாழ்க பாரதம். வளர்க அதன் வீரர்கள்
Sad that his popularity too came after the cinema influence. Such a great soldier with clear agenda.
இராணுவ வீரன் வீர மரணம் அடைந்தால் மட்டுமே போற்றுவது என்ற """புத்திசாலித்தனமான""" முடிவு எடுப்பது சிறப்பல்ல. நாட்டுக்காக தியாகங்கள் பல செய்யும் இராணுவ வீரர்கள் உயிரோடு இருக்கும் போதும் மதித்து போற்ற வேண்டும். அவர்களுக்கு உரித்தான வீட்டுமனை மற்றும் கடன் வசதிகள், தேவையான உதவிகள் செய்ய அரசு முடிவு எடுக்க வேண்டும். ""நக்கலாக வடக்கன்ஸ்""
எனாறு கருத்து போடும் நபர் அவர்களே உங்களால் ,பஞ்சாப், ஹரியானா, ஹிமாசல் எல்லைப் பகுதிகளில் எல்லைக்கோட்டை ஒட்டியுள்ள கிராமங்களில், திடீரென எந்த நேரமென்று இல்லாமல் பறக்கும் எதிரிகளின் விமானத்திலிருந்து பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்த ஒலிக்கும் ...ஙீ...ஙீ...ஙீ. என்கிற வயிற்றைப் பிரட்டும் விமான எச்சரிக்கை சைரன்..... ஒலியை. கேட்க நேர்ந்திருந்தால்தேச பக்தியை நக்கல் செய்யும் வார்த்தைகள் குரல் வளையில் அப்படியே உறைந்து போயிருக்கும்..வடக்கன்ஸாமில்ல. ...வடக்கன்ஸ்....இப்படி பேசறவங்க என்னிக்குமே """குறுக்குபுத்தி கிறுக்கன்ஸ்"""
அ தி மு க ஆட்சியின் போது மறைந்த புற்று நோய் மருத்துவர் சாந்தா அவர்களின் பெயரை canal bank ரோடுக்கு வைக்க வேண்டும் என்று விண்ணப்பம் வைத்தோம். எங்கள் கோரிக்கை எந்த குப்பை தொட்டிக்கு சென்றதோ
நல்லவேளை ஒரு வீரனின் பெயர். வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி. தேசப்பற்று கொண்டு தீர்மானத்திற்கு ஆதரவளித்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.
அப்பா.....தமிழ் நாடு பரவாயில்லை ...சந்தோசம்
நல்ல தேச பக்திக்கான முடிவு. பாராட்டதக்கது.
இது ஒரு நல்ல தொடக்கம் . ட்ராவிடிய ஆட்சியில் இந்த ராணுவ வீரனின் பியோபிக் படம் எடுத்த பொழுது , அவனின் உண்மையான சமுதாய பெயரை குறிப்பிட படத்தின் தயாரிப்பாளருக்கு தைரியம் இல்லையா அல்லது மனம் இல்லையா ?
மேஜர் முகுந்த் வரதராஜனின் மடியில் அவரது மூன்று வயது மகள் அமர்ந்திருக்க, இருவரும் சேர்ந்து அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், என்ற தேசபக்திப் பாடலைப் பாடும் நெஞ்சைத் தொடும் காணொளியை நம்மால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு தேசம் தன் வீரர்களின் வீரமரணத்தை ஒருபோதும் மறக்கக்கூடாது, அவர்களின் மரணத்திற்குக் காரணமானவர்களை ஒருபோதும் மன்னிக்கக்கூடாது. ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்.மேலும்
-
பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
-
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
-
'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'
-
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
-
இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்
-
இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு