மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி
கள்ளக்குறிச்சி: உதவி ரயில் ஓட்டுநர் மற்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
ரயில்வே துறையில் உள்ள 11,127 உதவி ரயில் ஓட்டுநர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் படித்தவர்கள் https://www.rrbapply.gov.in/ என்ற இணையதளம் மூலம் வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வில் 12,256 பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் https://ssc.gov.in/ என்ற இணையதளம் மூலம் வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 20ம் தேதி காலை 10:00 மணிக்கு இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.
பங்கேற்க விரும்புவோர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம்.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்