பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பத்மஜா தலைமையில் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள், குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, பொது சுகாதாரம் மற்றும் இதர பணிகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து, கலெக்டர் பேசுகையில், 'பேரூராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், மின் விளக்குகள் முழுமையாக செயல்பாட்டில் உள்ளதான என ஆய்வு செய்ய வேண்டும்.

பேரூராட்சிக்குட்பட்ட காலி இடங்களில் மரம் நடுதல் பணிகளை மேற்கொள்வதுடன், குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுதோறும் குப்பைகளை முழுமையாக சேகரிக்க வேண்டும்.

பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Advertisement