புனித அந்தோணியார் ஆலய தேர்திருவிழா
கள்ளக்குறிச்சி: மேல்நாரியப்பனுாரில் புனித அந்தோணியார் ஆலய 120ம் ஆண்டு தேர் திருவிழா இன்றும், நாளையும் நடக்கிறது.
சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுாரில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தர்மபுரி மறை மாவட்டம் லாரன்ஸ் பயஸ் கொடியேற்றம் செய்து வைத்தார். திருத்தல அதிபர் அந்தோணிசாமி தலைமையிலும், இதயா - சிறுமலர் சகோதரிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, நேற்று வரை நடந்த நிகழ்ச்சிகளில் லெனின்ஆன்ரூஸ், ஆரோக்கியதாஸ் பீட்டர் ஜான்பால், ஜான்கீரிஸ், மைக்கேல் அலெக்ஸ் ஆரோக்கியம், ஜெகத்ராயன் கஸ்பார் ஆகிய பங்கு தந்தைகள் பங்கேற்றனர்.
தினமும் காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை திருப்பலி பூஜைகளும், இசை பாடல்கள் மற்றும் நற்செய்தி கூட்டங்கள் நடந்தது. இன்று 12ம் தேதி இரவு 10:00 மணியளவில் பொருத்தனை தேர்பவனியும், நாளை 13ம் தேதி இரவு 10: மணியளவில் பெருவிழா தேர்பவனியும் நடக்கிறது.
தொடர்ந்து, 14ம் தேதி காலை 8:00 மணிக்கு நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது. இதனை திருதல அதிபர் ஆரோக்கியதாஸ் செய்து வைக்கிறார்.
தேர்திருவிழாவையொட்டி மேல்நாரியப்பனுார் ரயில் நிலையத்தில் இன்றும், நாளையும் கூடுதலமாக 2 நிமிடங்கள் ரயில்கள் நின்று செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
@block_B@
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கிறிஸ்தவர்கள் இந்த தேர்பவனிகளில் பங்கேற்று வழிபடுவதற்காக வருவர். இதையொட்டி, கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஷானாஸ் தலைமையில், ஒரு ஏ.டி.எஸ்.பி., 6 டி.எஸ்.பி.,கள், 13 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 607 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.block_B
மேலும்
-
பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
-
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
-
'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'
-
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
-
இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்
-
இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு