மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வரப்பிரசாதம்; 114 ரபேல் விமானங்கள் கொள்முதல் செயல்முறை துவக்கம்
நமது நிருபர்
பிரான்ஸிடமிருந்து 114 ரபேல் போர் விமானங்களை ரூ.3.25 லட்சம் கோடிக்கு வாங்க அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்திடம் இருந்து, ஏற்கனவே, 36 ரபேல் போர் விமானங்களை நம் விமானப்படைக்காக மத்திய அரசு வாங்கி உள்ளது. மேலும், நம் கடற்படையும், விமானம் தாங்கி போர்க்கப்பல்களுக்காக, 'ரபேல் - எம்' ரக விமானங்களை வாங்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.
கூடுதலாக, 114 ரபேல் போர் விமானங்களை விற்கவும் , தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கும் (ToT) மற்றும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அமைப்புகளை அந்த விமானங்களில் ஒருங்கிணைப்பதற்கும் பிரான்ஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் 'மேக் இன் இந்தியா' ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் என்று பிரான்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்திற்கு முன்னதாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஜூன் 13ம் தேதி தனது பிரான்ஸ் பயணத்தைத் தொடங்குகிறார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடியும் அதிபர் மேக்ரோனும் இருதரப்புப் பேச்சு நடத்துவர்.
புரியாத மாதிரியே எழுதறதுல நம்ம சிப்பு நிருபர் கில்லாடிபா...
..
ஏற்கனவே வாங்கன ரபேலுக்கே வேலை இல்லாமல் பட்டறையில் நிற்கிறது... இப்பொழுது இது தேவையா...
என்னவொரு அறிவு பாஸ் உங்களுக்கு ........ பழைய ரபேலுக்கெல்லாம் வேலை வேணும்ன்னா போர் வரணும் .... வந்தா எல்லோருக்கும் துன்பம்தான் .... பரவால்லியா ????
நல்லது ஆனால்.ஒரே சமயத்தில் மொத்தமாக வாங்கிக் குவித்தால் அடுத்த தலைமுறை விமானத்தை வாங்க வழியில்லாமல் போகும். இப்படித்தான் மிக்-29 விமானங்களை வாங்கிக் குவித்தனர் முன்பு.ஆயுத இடைத்தரகர்கள் எப்படியும், தரகுப் பணத்தை சம்பாதித்து விடுவார்கள்.
அடுத்தடுத்த தலைமுறை விமானங்களிடையே மாபெரும் வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை ....
பாராட்டுக்கள் ......... பாரதம் பாஜகவின் கையில் பத்திரமாக உள்ளது ...... பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலையை நினைத்துகூடப் பார்த்திருக்க முடியாது .....