ஏறுமுகத்தில் டிராக்டர் விற்பனை

மே மாத விற்பனை 20% உயர்வு

புதுடில்லி: நாட்டில் உள்நாட்டு டிராக்டர் விற்பனை மே மாதத்தில் 20 சதவீதம் உயர்ந்து 1,08,229 ஆக அதிகரித்து உள்ளதாக டிராக்டர் மற்றும் இயந்திர மயமாக்கல் சங்கம் (டி.எம்.ஏ.,) தெரிவித்துள்ளது.

ஏற்றுமதியும் நடப்பாண்டில் முதல் முறையாக 10,000த்தை தாண்டி, மே மாதத்தில் 10,165 ஆக உயர்ந்து உள்ளது. இது, 2025 மார்ச்சுக்கு பிறகு அதிகபட்ச அளவாகும்.

டிராக்டர்களுக்கான ஜி.எஸ்.டி., குறைப்பு கிராமப்புற வாங்கும் திறனை உயர்த்தி உள்ளதால், தேவை வலுவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

@block_B@ தொடர் வளர்ச்சி... ஜனவரி முதல் மே வரை, 2026ல் மொத்தம் 4,83,866 டிராக்டர்கள் விற்பனையாகி உள்ளன; இது 2025ம் ஆண்டின் இதே காலத்தை விட சுமார் 29% அதிகம். இந்த ஐந்து மாதங்களில் டிராக்டர் விற்பனை வளர்ச்சி மாத சராசரியாக சுமார் 31% ஆக உள்ளது.block_B

Advertisement