8 உணவு நிறுவனங்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நோட்டீஸ்

புதுடில்லி: உணவு பொருட்களின் பெயர், வர்த்தக பெயர் மற்றும் லேபிள்களில் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகக்கூறி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், எட்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இமாமி ஹெல்தி அண்டு டேஸ்டி, ஹெல்த் எய்டு, ட்ரூவி, தி ஹெல்தி பேக்டரி, ஹெல்தி மாஸ்டர், ஹெல்தி சாய்ஸ், பிளான் பி மற்றும் நியூ ஹெர்ப்ஸ் ஆகிய பெயர்களின் உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

'ஹெல்தி, வீகன், ஜீரோ மைதா, ட்ரூ வைட்டமின்' போன்ற பெயர்கள் மற்றும் உணவு பொருளின் தன்மை, தரம் மற்றும் சத்து மதிப்பு குறித்த சொற்கள், நுகர்வோரை தவறாக புரிந்து கொள்ளச் செய்யும் வகையில் இருப்பதாக ஆணையம் கூறியுள்ளது.

Advertisement