நெல்லியாம்பதியில் யோகா தின விழா
பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், நெல்லியாம்பதி அரசு ஹோமியோபதி மருந்தகம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நெல்லியாம்பதி ஊராட்சி ஆகியவை இணைந்து, யோகா விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடத்தியது.
நெல்லியாம்பதி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடந்த விழாவை, ஊராட்சித் தலைவர் மாயாண்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அரசு ஹோமியோபதி டாக்டர் நிதி ஷெனாய் தலைமை வகித்தார். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜினேஷ் மோன் சாண்டி, லட்சுமி பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதை தொடர்ந்து, பிரபல யோகாச்சார்யர் உன்னி தாவோ பொதுமக்களுக்குச் சிறப்பு யோகா பயிற்சிகளையும், அதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடத்தினார். அன்றாட வாழ்வில் யோகா செய்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என விளக்கிக் கூறினார்.
முகாமில், அப்பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள், ஆஷா பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஊராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியம் ஜாய்சன், இளநிலை சுகாதார ஆய்வாளர் சரண்ராம் ஆகியோர் பேசினர்.
மேலும்
-
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் முப்பெரும் விழா கொண்டாட்டம்
-
அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்! புதிய எண் வாங்க நடவடிக்கை
-
முதல்வர் விஜய் பிறந்த நாள் அறுசுவை உணவு வழங்கல்
-
அரசு கலை கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
-
முன்னறிவிப்பின்றி ராஜவாய்க்காலில் நீர் நிறுத்தம்: விவசாயிகள் அதிருப்தி
-
ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி சுகாதார பெண் தன்னார்வலர்கள் மனு