கலெக்டர் அலுவலக வளாக குளம் சீரமைக்கும் பணி துவங்கியது

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதர்கள் மண்டிய குளத்தை சீரமைக்கும் பணிகள் துவங்கியது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குளம் பல மாதங்களாக குப்பைகள் நிறைந்தும், ஆகாயத் தாமரைகள் படர்ந்தும் இருந்தது. இதற்கு அருகே உள்ள மூங்கில் மரங்களும் புதர்கள் மண்டியதோடு விஷ பூச்சிகளின் தொல்லையில் இங்கு வரும் மக்கள் பலரும் அச்சமடைந்தனர்.

இப்நிலையில், குளத்தில் மண்டியுள்ள புதர்களை அகற்றி துார்வாரி சீரமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement