அழைப்பு கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு மருத்துவமனை,சுகாதார நிலையங்ளில் ஏற்பாடு

கம்பம், ஜூன் 13

பெண்கள் கர்ப்பவாய் புற்றுநோயை தடுக்க தடுப்பூசி அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக செலுத்ப்படுகிறது. பெண்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட முன்வர வேண்டும் என சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் கர்ப்பவாய் புற்றுநோய் கண்டறிதல், சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் கர்ப்பவாய் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்தது. எனவே ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவனைகளில் புற்று நோய் கண்டறிதல் தீவிரப்படுத்தப்பட்டது.

என்.சி.டி ( தொற்றா நோய் பிரிவு) நர்ஸ்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் பெண்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.இதில் கர்ப்பவாய் புற்றுநோய் எந்த அளவிற்கு உள்ளது, எந்தெந்த பகுதியில் பரவி உள்ளது, கர்ப்பவாய் புற்றுநோய் தானா என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ள ‘வீடியோ கால்போஸ்கோபி’ என்ற மானிட்டருடன் கூடிய கருவி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி விபரம்:

இதற்குரிய தடுப்பூசி 9 முதல் 14 வயதுடைய பெண் பிள்ளைகளுக்கு இரண்டு தடுப்பூசி போட வேண்டும். முதல் டோஸ் செலுத்திய பின் 6 மாதங்கள் கழித்து மற்றொரு டோஸ் செலுத்த வேண்டும். 15 முதல் 21 வயதுள்ள மகளிருக்கு 3 டோஸ் செலுத்தப்படும். முதல் டோஸ் செலுத்திய பின் ஒரு மாதம் கழித்து 2 வது டோஸ், 6 மாதம் கழித்து 3 வது டோஸ் போட வேண்டும்.

கர்ப்ப வாய் புற்று நோய் எச்.பி.வி. ( HPV ) என்னும் வைரசால் ஏற்படுகிறது. தொண்டை மற்றும் மலக்குடலிலும் இந்த வைரசால் புற்று நோய் ஏற்படும். கடந்த 2 மாதங்களாத கிராம பகுதிகளில் நர்ஸ்கள் வீடு வீடாக சென்று இந்த தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இருந்த போதும் பெண்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. எனவே பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

9 வயது முதல் 21 வயது வரை உள்ள பெண் பிள்ளைகள் மற்றும் அதற்கு மேல் வயதான பெண்களும் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முற்றிலும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement