பெண் பள்ளியில் அமைச்சர் ஆய்வு
திண்டிவனம்: திண்டிவனம் முருங்கப்பாக்கத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக நீதித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, பள்ளி தலைமையாசிரியர் சந்தானலட்சுமியிடம் அமைச்சரிடம், ‘பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் வேண்டும், துாய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். விளையாட்டு மைதானத்தை சீரமைத்து தரவேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளியில் சிறப்பிடங்களைப் பிடித்த மாணவிகள் வேதவர்ஷினி, அனுஷா ஆகியோரை அமைச்சர் கவுரவித்து பாராட்டினார்.
பின், பள்ளி வளாகத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாணவர்களை பார்த்து, அங்குள்ள குறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement