பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்

முதுகுளத்துார்:

முதுகுளத்துாரில் இருந்து செல்லும் அரசு பஸ்ஸில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

முதுகுளத்துார் அரசு பஸ் பணிமனையில் இருந்து 40க்கும் மேற்பட்ட நகர, டவுன் பஸ் இயக்கப்படுகிறது.முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் 5000க்கும் மேற்பட்டோர் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து பயணிக்கின்றனர். குறிப்பாக முதுகுளத்துாரில் உள்ள அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் தினந்தோறும் பஸ்ஸில் வந்து சென்று படிக்கின்றனர். பள்ளி முடித்து வீட்டிற்கு மீண்டும் திரும்ப செல்வதற்கு கிராமங்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் வேறுவழியின்றி சில பஸ்களில் மட்டும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மாலை நேரத்தில் மாணவர்களின் நலன்கருதி கிராமங்களுக்கு கூடுதல் அரசுபஸ் இயக்க அரசு போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement