பணம், கொலுசு, மொபைல் திருடிய 4 பேருக்கு காப்பு

தாரமங்கலம்; தாரமங்கலம் அருகே கோட்டமேட்டை சேர்ந்த தறித்தொழிலாளி வேலு, 25. இவரது தாய் அருகே கோவிலில் நடந்த கூத்து பார்க்க நேற்று முன்-தினம் இரவு சென்றார்.
இவரது தம்பி கோகுல் வீட்டின் வெளியே படுத்து கொள்ள, வேலு வீட்டை தாழிடாமல் உள்ளே துாங்கினர். அதிகாலையில் கோகுல் பார்த்த போது பணம், வெள்ளி கொலுசு, மொபைல்போன் வைத்திருந்த இரும்பு பெட்டியை காணவில்லை.


தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி, வேலுவின் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த கோபிநாதன், 28, கிருஷ்ணன், 30, ராமன், 50, கந்தசாமி, 28, ஆகி-யோரை கைது செய்தனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த ரூ. 3.60 லட்சம், வெள்ளி கொலுசு, 4 மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்

Advertisement