டிரைவர் வீட்டில் திருடிய வாலிபருக்கு தர்ம அடி

சேலம்; சேலம் சீலநாயக்கன்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் டிரைவர் கணேசன், 42, மனைவி மல்லிகா, இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் அடுக்கு மாடி குடியி-ருப்பில், 2வது தளத்தில் வசிக்கின்றனர். தரை தளத்தில் மல்லிகா பேன்சி ஸ்டோர் வைத்-துள்ளார்.


நேற்று காலை பேன்சி ஸ்டோரில் தம்பதியர் இருந்த போது, வாலிபர் ஒருவர் வீட்டில் இருந்து இறங்கி ஓடினார். இதை பார்த்த கணேசன் கூச்ச-லிட்டதும், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். வீட்டின் பீரோவில் இருந்த தங்க மூக்குத்தி, வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார், விசாரணை நடத்தியதில் சேலம் அம்மாபேட்டை, சாஸ்திரி நகரை சேர்ந்த நாகராஜ், 24, என்பதும் வீட்டில் திருடியதையும் ஒப்புக்கொண்டார். பொதுமக்கள் தாக்கியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. நாகராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement