கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணையில் 23வது நாளாக வெள்ளம்

ஓசூர்; ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், தென்பெண்ணையில் தொடர்ந்து, 23வது நாளாக வினாடிக்கு, 1,000 கன அடிக்கு மேல் தண்ணீர்
செல்வதால், வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்-கிறது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 1,200 கன அடி நீர்வ-ரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று காலை நீர்வரத்து, 1,365 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயர-மான, 44.28 அடியில், 42.48 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,203 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.கடந்த மாதம், 31ம் தேதி முதல், நேற்று வரை தொடர்ந்து, 23 நாட்களாக தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,000 கன அடிக்கு மேல் நீர் செல்கிறது. அதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. ஆற்றங்-கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்-நடைகளை சுத்தம் செய்யவோ செல்ல வேண்டாம் எனவும், வருவாய்த்துறையினர் எச்ச-ரித்துள்ளனர்.
வெள்ளத்துடன் சேர்த்து தென்பெண்ணை ஆற்றில் குவியல், குவியலாக ரசாயன நுரை செல்கிறது. கர்நாடகா மாநிலத்திலிருந்து வரும் தென்பெண்ணை ஆற்றில், சுத்திகரிப்பு செய்யப்ப-டாத தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவு நீர் கலந்து வருவதால், ரசாயன நுரை தென்-பெண்ணை ஆற்றில் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. இது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.

Advertisement