வடலுார் பொறியாளர் இல்ல திருமண விழா
கடலுார்: குறிஞ்சிப்பாடி தி.மு.க., ஒன்றிய செயலாளர், வடலுார் பொறியாளர் சிவக்குமார்- உமா மகேஸ்வரி, இவர்களின் மகன் டாக்டர் அவினாஷ் குமாருக்கும், திருப்பூர் டாக்டர் கணேசன் பானுமதி -கணேசன் இவர்களின் மகள் டாக்டர் அஸ்விதாவுக்கும், வடலுார் மங்கையர்க்கரசி திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.
குறிஞ்சிப்பாடி தொகுதி எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மாவட்ட பொருளாளர் கதிரவன் முன்னிலை வகித்தார்.
விழாவில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், முன்னாள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், தொழிலதிபர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள், வர்த்தக பிரமுகர்கள், கடலுார் மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர்கள், தி.மு.க., சார்பு அணி பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியினர் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு, சிவகுமார் -உமா மகேஸ்வரி ஆகியோர், நன்றி தெரிவித்தனர்.
மேலும்
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்