கிறிஸ்துவ போதகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி
சென்னை: கிறிஸ்துவ மத போதகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மீது, த.வெ.க., தலைமை கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக கிறிஸ்துவ சபை கூட்டமைப்பு சார்பாக, 'போதகர்கள் சுவிசேஷகர்கள் கூடுகை' என்ற நிகழ்ச்சி, சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில், சபாநாயகர் பிரபாகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தமிழக அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் பங்கேற்றனர்.
ஜேசிடி பிரபாகர் பேசியது இதுதான்!
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
பிரபாகர் பேசுகையில், ''சிறுபான்மை மக்களுக்கான அடையாளம், இந்த அரசு வாயிலாக ஏற்பட்டு வருகிறது; அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாம் மாற்ற வேண்டியது இன்னும் பல இருக்கிறது,'' என்றார்.
வன்னி அரசு பேசுகையில், ''குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தபோது கிறிஸ்துவர்கள் போராடவில் லை. இன்று முஸ்லிம்களை குறி வைத்துள்ள பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., நாளை கிறிஸ்துவர்களையும் குறி வைப்பர். ஆனால், இன்னும் நாம் ஜெபம் மட்டும் தான் செய்கிறோம்.
''இனி கிறிஸ்துவர்கள் அரசியல்மயப்பட வேண்டும். பைபிளில் இருப்பது தான் அரசியலமைப்பு சட்டத்திலும் இருக்கிறது. அந்த சட்டம் இருக்கும் வரை தான் நமக்கு பாதுகாப்பு,'' என கூறினார்.
அமைச்சர் வன்னி அரசு பேசியது இதுதான்!
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வன்னி அரசின் பேச்சு, மதக் கலவரத்தை துாண்டும் விதமாக உள்ளதாக ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
த.வெ.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: மத சார்பற்ற அரசியலைத் தான் த.வெ.க., முன்னெடுக்கிறது. த.வெ.க.,வில் இருப்பவர்கள், ஜாதி, மத நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடாது என கட்சி தலைமை உத்தரவு போட்டுள்ளது. ஏற்கனவே, சட்டசபையில் பைபிள் வசனங்களை சபாநாயகர் பிரபாகர் பேசியதை கட்சி தலைமை கண்டித்தது.
தற்போது, கிறிஸ்துவ மத போதகர்கள் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசியதை, கட்சி தலைமை ரசிக்கவில்லை; அவரை கண்டித்ததுடன், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்டு உள்ளது.
அதற்கு, 'வன்னி அரசு பேசும்போது தான் நிகழ்ச்சிக்கு சென்றேன். அவர் பேசியது எனக்கு தெரியாது. இனி, மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன்' என சபாநாயகர் விளக்கம் அளித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (55)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14 ஜூன்,2026 - 21:05 Report Abuse
வன்னி அரசின் மீது விஜய் அரசு கடும் தண்டனை விதிக்க வேண்டும் இனி கட்சியில் இது போன்று மத விஷயங்களில் தலையீடு கூடாது என்று முதல்வர் விஜய் அவர்களே நேரிலேயே அவர்களிடம் கூற வேண்டும் இவர்கள் உண்பது உறங்குவது வளர்வது எல்லாமே இந்த பாரத இந்திய மண்ணில்தான் ஆனல் நம்பிக்கை துரோகம் செய்து தன்னை பெற்றுடுத்த தாய்க்கே அந்த பாரத மாதாவிர்க்கே துரோகம் செய்யக்கூடாது 0
0
Reply
chinnamanibalan - ,
13 ஜூன்,2026 - 20:08 Report Abuse
சமூக நல்லிணக்கம், சகிப்புத் தன்மை இரண்டும், இந்த மண்ணில் தொன்று தொட்டு இந்துக்களிடம் நிலைத்து இருப்பதால்தான், தமிழ் மண்ணில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடிகிறது என்பதை இவர்கள் உணரவில்லை. எனவேதான் இவர்கள் தங்களது மதம் குறித்து மட்டுமே ஆதங்கம் கொள்கின்றனர். ஆனால் இவர்கள், கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிவதை அறியவில்லை. 0
0
Reply
பேசும் தமிழன் - ,
13 ஜூன்,2026 - 17:21 Report Abuse
திருமா... வன்னி அரசு போன்ற ஆட்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று பார்த்தால்....அதை செய்யவில்லை..... சரி அனைவருக்கும் பொதுவாக இருப்பார்கள் என்றாலும் பரவாயில்லை..... ஆனால் அவர்கள் முஸ்லீம்களுக்கு முட்டு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். 0
0
Reply
venugopal, s - ,
13 ஜூன்,2026 - 15:46 Report Abuse
தர்மபுரி யில் ஒருத்தன் கூவுவானே. இமாம், அர்ச்சகர், புத்த பிக்குகள், ஓசி சோறு kozai மணி யாரையும் கூப்பிடவில்லையா அப்டின்னு உதார் விட்டான்? இப்போ எங்கே ஓடி ஒளிந்து கொண்டு உள்ளான்? கொஞ்சம் வெளியே வந்து கூவு 0
0
Reply
அருண் பிரகாஷ் மதுரை - ,
13 ஜூன்,2026 - 14:56 Report Abuse
இப்தார் நோன்பு திறப்பிற்கு எவரும் போக மாட்டார்களா. அன்று பார்ப்போம். இந்த ஆட்சி மாற்றமா இல்லை ஏமாற்றமா என்று.. பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதைதான் 0
0
Reply
dunamis dude - ,இந்தியா
13 ஜூன்,2026 - 13:32 Report Abuse
கிறிஸ்தவ ஆட்சி அல்ல கிறிஸ்துவின் உபதேசங்களை பின்பற்றும் ஆட்சி. இப்படிப்பட்ட நல்ல ஆட்களை ஏற்படுத்திய முதல்வருக்கு நன்றி 0
0
Reply
avvaiyar - ,இந்தியா
13 ஜூன்,2026 - 13:12 Report Abuse
நானும் அப்படிதான் நினைத்தேன். Vanni Arasu represents the Tindivanam SC assembly constiuency என்கிறது விக்கிபீடியா ... அப்படி என்றால் அவர் ஹிந்து என்று சொல்லி அங்கே நின்று இருக்கிறாரா ? என்ன கொடுமை இது சரவணன் 0
0
Reply
Enrum anbudan - dammam,இந்தியா
13 ஜூன்,2026 - 13:01 Report Abuse
இவர்களை போன்றவர்கள் என்றும் மாறமாட்டார்கள், பணத்தை தவிர இவர்களுக்கு வேறு ஒன்றும் வேண்டாம். நாட்டை பற்றியோ, மக்களை பற்றியோ கிஞ்சித்தும் அக்கறை இல்லை. இவர்கள் பதவி ஏற்கும்போது எடுத்துக்கொண்ட சத்தியத்தை மீறுகின்றார்கள். இவர்களை களை எடுக்க வேண்டிய மத்திய அரசு, நீதிமன்றம் வாளாவிருக்கின்றது. கயவர்கள் கூடாரமா தமிழக அரசு? 0
0
Reply
D Natarajan - CHENNAI,இந்தியா
13 ஜூன்,2026 - 12:48 Report Abuse
அவன் ஒரு கிரிப்டோ கிறிஸ்டியன், தலித் பெயரில் அட்டகாசம். கிருத்துவனாக மாறியும், தலித் பலன்களை அனுபவிக்கும் கேடுகெட்ட அரசியல் வாதி. அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
13 ஜூன்,2026 - 12:10 Report Abuse
த வெ க தனக்கு கிடைத்திருக்கும் நல்ல பேரை காப்பாத்திக்கணும்னா உடனே மந்திரி சபையை மாத்தி அமைக்கோணும். வன்னியரசை ட்ராப் பண்ணனும். ஹி இஸ் அன்ஃபிட் டு பி எ மினிஸ்டர். அப்பறம் ஜேஸிடி பிரபாகரனை கேரளத்தில் உள்ள சர்ச்சுக்கு அனுப்பிடுங்க. அலப்பறை பண்ணாத இன்னொரு கிரிஸ்துவரை சபா நாயநகரா போட்டுக்கலாம். அடுத்த மந்திரி சபை மாத்தி அமைக்கும் வரை இப்புடியே ஓட்டலாம். 0
0
Reply
மேலும் 45 கருத்துக்கள்...
மேலும்
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement