'22 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்டெடுக்க வேண்டும்'

பல்லடம்: -

பல்லடத்தில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பயிற்சி முகாம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மதுசூதனன் தலைமையில் நடந்தது.

மாநிலக் குழு உறுப்பினர் காமராஜ் வரவேற்றார்.

கூட்டத்துக்கு பின் மாநிலத் தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:

விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டி, முதல்வர் விஜயை சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போதைய அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு பெரும்பான்மையான விவசாயிகளுக்குப் பயனளிப்பதாக இல்லை. தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியை வலியுறுத்தி, சென்னை கூட்டுறவுப் பதிவாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளோம். விவசாயிகள் போராடுவதற்குக் காரணம் தி.மு.க.வின் துாண்டுதல் தான் என்ற அமைச்சர் நிர்மல்குமாரின் கருத்து தவறானது.

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் உபரியாகக் கண்டறியப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 22 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்டெடுத்து வழங்க வேண்டும். நெல், கரும்புக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை அமராவதி சர்க்கரை ஆலை மற்றும் தென் மாவட்டங்களுக்கான நேஷனல் சர்க்கரை ஆலையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். விவசாயிகளுக்குத் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

----

2 படங்கள்

நடுவில் உள்ளவரை மட்டும் கட் செய்து வைக்கவும்.

----------------------------------------

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாநில தலைவர் ரவீந்திரன்; இதில் பங்கேற்றோர்.

Advertisement