ஜூன் 23ல் தபால் துறை குறைதீர் கூட்டம்

தேனி, ஜூன் 13-தபால் துறை சார்பில் தேனி கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூன் 23 மாலை 3:00 மணிக்கு வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் தபால் பணிகள், தபால் சேவையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை உரிய விபரங்களுடன் தெரிவிக்கலாம். நேரில் பங்கேற்க இயலாதவர்கள் dotheni.tn@indiapost.gov.in என்ற இணை முகவரிக்கு புகார்கள், ஆலோசனைகளை ஜூன் 18 க்குள் அனுப்பலாம் என தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார். 

Advertisement