தி.மு.க., - த.வெ.க., தான் பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள்: அமித்ஷா பேச்சு
சென்னை: ''உங்களின் கொள்கை எதிரிகள் தி.மு.க.,வும், தமிழக வெற்றிக் கழகமும் தான். உங்கள் பணி, மக்களை சந்தித்து, மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறுவது மட்டுமே,'' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.,வின் மாநில மையக்குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டில்லியில் நடந்தது. இதில் பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ், தமிழக பா.ஜ., தலைவர் தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் முருகன், மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, வானதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: நாட்டின் பிரதமராக அதிக நாட்கள் பணியாற்றிய சாதனையை, நரேந்திர மோடி படைத்துள்ளார். அவரின் தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அவற்றை, தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் சேர்க்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைவரை அனுப்பி, பொதுக்கூட்டங்கள், செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த வேண்டும்.
அண்ணாமலை விலகலால், தமிழக பா.ஜ.,வுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இதைக் கட்சி தொண்டர்கள் உணரும் வகையில், நிர்வாகிகள் கட்சி வளர்ச்சி பணியில் முழு கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு கொள்கை ரீதியான எதிரி தி.மு.க.,வும், த.வெ.க., தலைவர் விஜயும் தான். எனவே, தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல்கள், த.வெ.க., ஆட்சியில் நடக்கும் தவறுகளை பற்றி மக்களிடம் பேச வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எதை பற்றியும் நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. அனைத்தையும் நான் பார்த்து கொள்கிறேன். உங்களின் வேலை, ஊர் ஊராக சென்று, தொண்டர்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்துவது தான்; மக்களை சந்தித்து, மத்திய அரசின் சாதனைகளை கூற வேண்டியது தான்.
இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார்.
வாசகர் கருத்து (30)
Tetra - New jersy,இந்தியா
13 ஜூன்,2026 - 19:28 Report Abuse
அய்யா அமித் நீங்க சந்திச்சவங்க மட்டும்தான் தமிழக பாஜக. அவங்களும் திமுக அதிமுக தான். இங்க பாஜக வே கிடையாது. இவங்களை வெளில அனுப்பிச்சாதான். தமிழகத்தில் பாஜக பெயர் பலகையாவது மிஞ்சும். என்றாவது யோசித்திருக்கிறீர்களா? அதெப்படி இந்தியா முழுவதும் இருக்கிற பாஜக தமிழ்நாட்ல மட்டும் இல்லன்னு? அண்ணாமலை சொன்னதை கேக்காம எடப்பாடிக்கு எடுபிடியா இருந்து பாஜகவையே தமிழகத்தில் ஒழிச்சிட்டீங்களே. தேசீயவாதியா மனம் நொந்து இதை பதிவிடுகிறேன் 0
0
Reply
Tetra - New jersy,இந்தியா
13 ஜூன்,2026 - 19:28 Report Abuse
அய்யா அமித் நீங்க சந்திச்சவங்க மட்டும்தான் தமிழக பாஜக. அவங்களும் திமுக அதிமுக தான். இங்க பாஜக வே கிடையாது. இவங்களை வெளில அனுப்பிச்சாதான். தமிழகத்தில் பாஜக பெயர் பலகையாவது மிஞ்சும். என்றாவது யோசித்திருக்கிறீர்களா? அதெப்படி இந்தியா முழுவதும் இருக்கிற பாஜக தமிழ்நாட்ல மட்டும் இல்லன்னு? அண்ணாமலை சொன்னதை கேக்காம எடப்பாடிக்கு எடுபிடியா இருந்து பாஜகவையே தமிழகத்தில் ஒழிச்சிட்டீங்களே. தேசீயவாதியா மனம் நொந்து இதை பதிவிடுகிறேன் 0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
13 ஜூன்,2026 - 08:42 Report Abuse
திமுக உடன் திரைமறைவு உடன்பாடு உங்களுக்கு காங்கிரசை ஒழிக்கனும்அதுக்கு எந்த அளவுக்கும் கீழே போவீங்க இனி தமிழ்நாட்டில் உங்க கட்சியை பூதக்கண்ணாடி வைத்துதான்தேடவேண்டும் 0
0
Reply
Sundar R - ,இந்தியா
13 ஜூன்,2026 - 00:35 Report Abuse
The viewpoint of Amit ShahJi is absolutely correct. The leaders and all the members of the DMK and TVK are known for their MORAL AMBIGUITY. In other words, they are ANTI-NATIONALS, ANTI-HINDU, ANTI-HINDI, HIGHLY CORRUPTIVE and they are universally known for their VERY BAD MORAL INTEGRITY AND VERY BAD PERSONAL INTEGRITY.
Our Tamil Nadu people will be able to enjoy the fruits of their huge, hard-earned money remitted to the government as taxes if only the dacoit-run-parties like the DMK and TVK are dumped well before their participation in the next elections.
NTK, VCK, MDMK, DMDK are also unwanted parties which are proving to be huge security threats for our people and our nation. The above mentioned four parties have to be dumped alongwith the DMK and TVK. 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
12 ஜூன்,2026 - 23:34 Report Abuse
திமுகவும் தவெகவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். சைத்தான் ஒன்று சைத்தான் இரண்டு அவ்வளவே. இரண்டும் தமிழகத்தின் ஊழல், அடாவடி, அட்டூழியத்தின் கவர்ச்சி முகங்கள். 0
0
விருமாண்டி - Benaras,இந்தியா
13 ஜூன்,2026 - 09:42Report Abuse
மதவெறுப்பு அரசியல், மெகா ஊழல், வாஷிங் மெஷின், மிரட்டி பணம் பறித்தல் . 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
12 ஜூன்,2026 - 22:20 Report Abuse
தமிழ் நாட்டு பிஜேபி கட்சியின் மாநில மைய கூட்டத்தை கூட தமிழ் நாட்டில் நடத்த முடியாமல் டெல்லியில் நடத்துகிறார்கள் 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
12 ஜூன்,2026 - 22:18 Report Abuse
இரண்டாம் சாணக்கியர் வாழும் சர்தார் படேல் சொல்கிறார், அண்ணாமலை போனதால் ஒரு இழப்பும் இல்லை என்று. அண்ணாமலை பதில் சொல்வாரா 0
0
Reply
Krishna - bangalore,இந்தியா
12 ஜூன்,2026 - 22:10 Report Abuse
BJP has Become Just Another Useless Party Which Doesnt Care Even its Old DieHard BJP Cadres/Supporters, Leavealone CommonPeople BUT Relying on ExtensiveFalsePropagandas & EVMs 0
0
Reply
K.n. Dhasarathan - chennai,இந்தியா
12 ஜூன்,2026 - 21:48 Report Abuse
பொய் ஜே பி க்கு கொள்கை என்று உண்டா ? அடுத்தவர் ஆட்சியை அழிப்பதும், மாற்று கட்சி ஆளும் மாநிலங்களை சீர்குலைப்பதும் தானே உங்கள் வேலை எங்காவது நேர் வழியில் ஆட்சியை பிடித்தீர்களா ? 0
0
Reply
Tamilan - ,இந்தியா
12 ஜூன்,2026 - 21:41 Report Abuse
த வெ க வுடன் ஒட்டிக்கொள்ள அல்லது தங்கள் கூட்டத்தாணியில் இணைத்துக்கொள்ள படாத பாடுபட்டார்கள். இப்போது கொள்கை எதிரிகளா?. 0
0
Reply
மேலும் 19 கருத்துக்கள்...
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
Advertisement
Advertisement