பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு

வால்பாறை: தமிழ்நாடு மோட்டார் சைக்கிள் நலசங்கம் மற்றும் கோவை பைக்கர்ஸ் கம்யூனிட்டி சமூக நல அமைப்பின் சார்பில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து, சுற்றுலா பயணியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், கோவையிலிருந்து பைக்கில் வந்த சமூக நல அமைப்பினர், பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

சமூக நல சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்து சுற்றுலா பயணியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்று நடவு செய்கிறோம். வால்பாறையில் பல்வேறு இடங்களில், 50 மரக்கன்று களை நடவு செய்துள்ளோம். இயற்கையை பேணி காக்கும் வகையில் சுற்றுலா பயணியர் தங்களது பயணத்தை இனிமையாக்கி கொள்ள வேண்டும்,' என்றனர்.

Advertisement