அ.தி.மு.க.,வில் மீண்டும் சசிகலா, தினகரன்?
- நமது நிருபர் -
அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்களை, மீண்டும் இணைப்பதற்கான ரகசிய பேச்சு, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.,வை பலப்படுத்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் பலர், 'இடைத்தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வை பலப்படுத்த வேண்டும்; அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், சசிகலா போன்றோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்' என, பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
'அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும். மீண்டும் பழனிசாமி முதல்வராக வேண்டும்' என வலியுறுத்தி, தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகி மகேந்திரன் தீக்குளித்து மரணம் அடைந்த பின், பழனிசாமி மனமும் மாறியுள்ளது.
பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க, மூத்த தலைவர் ஒருவரின் வாயிலாக ரகசிய பேச்சு தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலா வீட்டில், சசிகலாவின் சகோதரர் திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர்.
அ.தி.மு.க.,வில் இணைந்தால், சசிகலாவுக்கு அவைத்தலைவர் பதவி வழங்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அ.தி.மு.க.,வில் இணைய வேண்டும் என்றால், அவருக்கு துணை பொதுச்செயலர், ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இதை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் ஆறு துணை பொதுச்செயலர் பதவி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., நிர்வாகிகளில் 35 வயதுக்கு கீழ் யாரும் இல்லை. எனவே, இளைஞர்களை கட்சியில் சேர்க்க, வியூகம் வகுக்கப்படுகிறது. இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றாலே, கட்சியினர் த.வெ.க., செல்வது தடுக்கப்படும். எனவே, அ.தி.மு.க., வெற்றி பெற, இணைப்பு அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (11)
பைரவன் - ,
22 ஜூன்,2026 - 11:04 Report Abuse
எடப்பாடி அப்படி ஒரு முடிவெடுத்தால் அது எறும்புக்கு பயந்து வீட்டை கொளுத்தின கதையாகத் தான் முடியும். 0
0
Reply
Ravi Kumar - chennai,இந்தியா
22 ஜூன்,2026 - 11:03 Report Abuse
ஊழல் வழக்கு , சிறையில் இருந்து , சேர்த்து என்ன பயன் ? கட்சி பெயர் already damaged . 0
0
Reply
பிரேம்ஜி - ,
22 ஜூன்,2026 - 10:51 Report Abuse
இல்லாத கட்சியில் சேர இவ்வளவு போட்டியா? செய்தியை நம்ப முடியவில்லையே! இந்த இரண்டு பேரும் மலைமுழுங்கிகளாச்சே? ஒரு ஆதாயமும் இல்லாமல் இவர்கள் எந்த வேலையிலும் இறங்க மாட்டார்கள்! ஒரு வேளை கட்சிப் பணத்தை அமுக்க வருகிறார்களா? 0
0
Reply
ராமகிருஷ்ணன் பரமக்குடி - ,
22 ஜூன்,2026 - 09:54 Report Abuse
தினகரனும், சசிகலாவும் திமுகவை மிஞ்சிய களவாணிகள். மக்கள் ஒட்டு மொத்தமாய் நிராகரித்து விடுவார்கள். நல்லது நடக்கட்டும். மெரினாவில் MGR சமாதிக்கும் ஜெயலலிதா சமாதிக்கும் இடையே அதிமுகவை புதைத்து விடுவார்கள். ஆழ்ந்த அனுதாபங்கள் 0
0
Reply
T.S.Murali - chennai,இந்தியா
22 ஜூன்,2026 - 09:14 Report Abuse
கனவு காண்பது உங்களுக்கு இயல்பு. 0
0
Reply
ராஜ் - ,
22 ஜூன்,2026 - 08:18 Report Abuse
பட்டுப்போன மரத்திற்கு எதுக்கு தண்ணிர் 0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
22 ஜூன்,2026 - 07:43 Report Abuse
இது நடந்தால் எதிரிகளுக்குத்தான் நன்மை. பெருச்சாளிகளை வீட்டிற்குள் விட்ட கதையாகிவிடும். 0
0
Reply
தேவதாஸ் புனே - ,
22 ஜூன்,2026 - 07:37 Report Abuse
இனி கட்சியில் யாரை சேர்த்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை.....
அதிமுக நேரம் முடிந்துவிட்டது.....
அடுத்த தேர்தலுடன் திமுக சகாப்தமும் முடிந்துவிடும்......
தமிழகத்தில் எப்போதும் இரு துருவங்கள் தான்.......
ஒன்று உருவாகியுள்ளது.... மற்றொன்று உருவாகிவிடும்..... 0
0
pkgk - ,இந்தியா
22 ஜூன்,2026 - 09:37Report Abuse
TV Ka இனி போட்டியின்றி முதல்வர் பதவி பெற்று தமிழ்நாட்டை ஆண்டுகொன்டே இருக்கலாம். 0
0
Kadaparai Mani - chennai,இந்தியா
22 ஜூன்,2026 - 10:15Report Abuse
With the existing reels party and one media d new party will know the reality very soon. 0
0
A viswanathan - ,
22 ஜூன்,2026 - 12:07Report Abuse
Tooo லேட் 0
0
Reply
மேலும்
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
Advertisement
Advertisement