ரோட்டோரத்தில் குப்பை குவிப்பு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோதவாடி ரோட்டில் இருந்து நல்லட்டிபாளையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் குடியிருப்புகள் அருகே அதிகளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
நல்லட்டிபாளையம் ரோட்டில் கடந்த சில மாதங்களாகவே குப்பை கொட்டப்படுகிறது. இங்கு குப்பை கொட்ட வேண்டாம் என, அறிவுறுத்தினால் ஒரு சிலர் கேட்பதில்லை. இது உங்கள் இடமா, ரோட்டோரத்தில் தான் குப்பை கொட்டுகிறோம் என, வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம் சார்பில், தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்க வந்து செல்லும் நிலையில், இரவு நேரங்களில் இங்கு சிலர் குப்பை கொட்டுகின்றனர். இதனால், தெரு நாய்கள் இங்கு முகாமிட்டு குப்பையை கிளறுகின்றன. எனவே, இங்கு குப்பை கொட்டுவதை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
மேலும்
-
செழித்து வளரும் அரச செடிகளால் நடவாவி கிணறு வலுவிழக்கும் அபாயம்
-
பல்லாங்குழியான பாலாற்று பாலம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
-
மேற்கு மாம்பலத்தில் ஆக்கிரமிப்புகளால் 40 அடி சாலை 10 அடியாக குறுகி பாதிப்பு
-
மனைவியுடன் தகராறு மகன் மாயம்: தாய் புகார்
-
திருமலை கோவிலில் செப்., மாத சேவைக்கு முன்பதிவு தொடக்கம்
-
சாய்ராம் குரூப் நிறுவனம் அன்ன தானம் வழங்கல்